Revenue Received From Petroleum Products Rs.2,25,495 Crores

பெட்ரோல், எரிவாயு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.2,25,495 கோடி வருவாய்


பெட்ரோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த மொத்த வரி வருவாய் ரூ.2,25,494 கோடி என்று மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேட்கப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு துறைக்கான துணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் இந்த தகவலை அளித்துள்ளார்.

இறக்குமதி தீர்வை, உற்பத்தித் தீர்வை, சேவை வரி, மிகை வரி, உரியம் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.1,36,497 கோடி என்றும், மாநில அரசுகளுக்கு கிடைத்த வருவாய் ரூ.88,997 கோடி என்றும் அமைச்சர் சிங் கூறியுள்ளார்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மண்ணெண்ணெய் விற்பனையில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட லிட்டருக்கு ரூ.0.82இம், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.22.58இம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது என்று கூறிய அமைச்சர் சிங், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஓ.என்.ஜி.சி.உள்ளிட்ட எரிபொருட் நிறுவனங்களுடன் சுமை பகிர்வு மூலம் சமாளித்து வருவதாக கூறியுள்ளார்.

2010-11ஆம் நிதியாண்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.44,371 கோடி ரொக்க உதவியாகவும், போக்குவரத்து மானியமாகவும், இயற்கை எரிவாயுவிற்கான மானியமாகவும் மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.