Phone Number +960 missed call - Rupee 40for calling for that number



வேலூர்: வேலூர் மாவட்டத்தில், மொபைலில், "மிஸ்டு கால்' கொடுத்து, லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்வது நடந்து வருகிறது. உலக அளவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், மொபைல்போன் மூலம் நடக்கும் மோசடிகளில், இந்தியாவில் அதிகம் . அது கணிசமாக தமிழகத்தில் அதிகரிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960' என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது தெரியவில்லை. இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, போஸ்ட் பெய்டு கணக்கில் இது போன்று நடப்பதில்லை. பெரும்பாலும், ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

இது குறித்து போலீசார் கூறியது: இந்த மோசடி மற்ற நிறுவன மொபைல் வாடிக்கையாகளர்களை விட, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்குதான் அதிக அளவில், "மிஸ்டு கால்கள்' வருகிறது. சாதாரணமாக, 10 இலக்க எண்ணில் இருந்து பேசினால், உள்ளுர் கட்டணம் தான் வரும். ஆனால், இந்த மிஸ்ட் கால் நம்பரை தொடர்பு கொண்டால், 40 ரூபாய் பிடிக்கப்படுவது எப்படி எனத் தெரியவில்லை. இந்த மோசடி குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து மேலும் விசாரித்த போது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மோசடி கும்பல், தமிழகத்தில் முகாமிட்டு, இந்த மோசடிகள் செய்து வருவதாகவும், தினம் லட்சக்கணக்கான பணம் மோசடி நடந்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் அது எப்படி என்று யாரும் விளக்க முன் வரவில்லை. அதே சமயம் 40 ரூபாய் ஏன் பிடிக்கப்படுகிறது என்பது குறித்து மொபைல் போன் கம்பெனிகளும் விளக்கம் தரவில்லை.